அவசர பணியாக டில்லி சென்று, ஜூன் 27, 2025 அன்று முன்னிரவில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன்.
விமானத்தில் வழியோர இருக்கை. மூன்று வரிசை இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த இளைஞர், விதம் விதமாக தற்படம் எடுத்து கொண்டிருந்தார். புதிதாக பயணம் செய்பவர் போல் தெரிந்தது. முழங்கையில் கோட்டை சாய்த்திருந்தது பழைய தமிழ் சினிமா கதாநாயகனை நினைவு படுத்தியது.
மைய இருக்கை காலியாக இருந்தது. முன் வரிசையிலும் அதே நிலை...
கடைசி நேரத்தில் இரு சிறுவர்கள் வந்தனர். என் அருகே ஜன்னலோர இளைஞரை தட்டிப்பார்த்தான் இளையவன். எடுபடாததால் நடுவில் அமர்ந்தான். முன் நடு இருக்கையில் அமர்ந்தான் மூத்தவன் நிவான்.
விமானம் புறப்பட்டதும், ‘பாபா...’ என, பின்புறம் தந்தையை தேடி நகர முயன்றான் நிவீஷ். பணிப்பெண்ணின் மென்மையான அதட்டலில் மீண்டும் அமர்ந்தான்.
விமானம் மேலெழுந்து சமநிலையில் பறக்க துவங்கியது. அவ்வப்போது, நீல விளக்கை ஏற்றி பணிப்பெண்களுக்கு வேலை ஏவிக்கொண்டிருந்தனர். தட்டாமல் சேவை கிடைத்தது. அடிக்கடி விமானத்தில் பயணிப்போர் என சிறுவர்களின் நடத்தையால் தெரிந்தது.
தின்பண்ட வண்டியை உருட்டிய பணிப்பெண்களிடம், ‘பசிக்கிறது. நான் ஆர்டர் செய்யலாமா...’ என கேட்டான் நிவீஷ்.
சிரித்தபடி, ‘சற்று பொறு...’ என அமைதியாக்கினர் பெண்.
முறைப்படுத்தாத உலக வரைபடம் ஒன்றை, இருக்கை இடைவெளி வழியாக தம்பியிடம் தந்தான் நிவான்.
கைநழுவி அது என் காலடியில் விழுந்தது. எடுத்து கொடுத்தேன். சற்று ஆழமாக என்னை பார்த்து சிரித்தான்.
எனக்கு உணவு பொதி வந்தது.
‘பகிர்ந்து கொள்கிறாயா...’
இளையவனிடம் கேட்டேன்.
சற்று தயங்கியபின், ‘என்ன இருக்கு...’ என்றான்.
‘பிரித்தால் தானே தெரியும்...’
பொதியை கையில் கொடுத்தேன்.
தாங்கியை விரித்து பொதியை வைத்து பிரித்தான்.
தேவையானதை மட்டும் எடுத்து கொண்டான்.
அண்ணனுக்கும் கொடுத்து சாப்பிட்டான்.
பின், விளையாட்டு துவங்கியது.
முறைப்படுத்தி அலகிடப்படாத உலக வரைபடம் ஒன்றில் இருவரும் மாறி மாறி குறியிட்ட படி இருந்தனர்.
அதில் ஏவுகணைகள் வரைந்து சண்டையை துவங்கினர்.
‘ஸ்பெயினை நான் பிடித்து விட்டேன்...’
‘அதை விட்டு தர மாட்டேன்... வளங்கள் நிறைந்தது...’
‘துருக்கியை வேணா நீ எடுத்துக்கோ...’
இப்படி உலக நாடுகளை பந்தாடிக்கொண்டிருந்தனர் இருவரும்.
சண்டை முற்றியது. உலக வரைபட காகிதம் கிழியும் நிலையை அடைந்தது.
பொது அறிவை வளர்க்க, விளையாட்டு வழியாக சிறுவர்கள் செயல்படுவதாக எண்ணிய எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.
மென்மையாக, ‘நீங்க... நாடு பிடிக்க விரும்புறீங்களா... அமைதியா வாழப்போறீங்களா...’ என்று கேட்டேன்.
‘நாடுதான் வேணும்...’
நிவீஷ் சொன்னான்.
அந்த எண்ணப்போக்கை மாற்றும் வல்லமை யாரிடம் இருக்கு...
பின், எங்கள் பேச்சின் திசை மாறியது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் பிரபல சட்ட சேவை வழங்கும் நிறுவனம் நடத்தும் குடும்பத்தை சேர்ந்தோர். சென்னை வழியாக திருப்பதி செல்வதை அறிந்து கொண்டேன்.
அடுத்து பள்ளி, படிப்பு பற்றி உரையாடல் நீண்டது.
அகமதாபாத் நகரில் பிரபல பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான் நிவீஷ். நிவான், 5ம் வகுப்பு.
வகுப்பில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழி கற்பதாக கூறினர். காகிதத்தில் பெயரை மூன்று மொழிகளிலும் எழுத சொன்னேன். இரண்டு மொழிகளில் எழுதினான் நிவீஷ். தாய்மொழியான குஜராத்தியில் எழுத வரவில்லை.
அண்ணன் வாங்கி அதை எழுதி தாந்தான். உடன் இருவர் பெயரையும் தமிழில் எழுதி தந்தேன்.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது விமானம்.
இறங்க தயாரான போது அருகில் வந்தார் அவர்களின் அம்மா. என்னை அறிமுகப்படுத்தினான் நீவிஷ். மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினார் அந்த வழக்கறிஞர். வன்முறையற்ற அடிச்சுவடு பதிக்கும் இலக்கியம், விளையாட்டு உருவாக்கும் வழிமுறையை யோசித்தபடி நான் நடந்தேன்.